Friday, September 30, 2016

மதம் மாறிய நண்பன்

க்ஷணப்பொழுதில் மனம் மாறி
புதிதோறு மதம் கண்டு
கர்வத்துடன் இனம் பெயர்ந்தாயோ?
தனதென சொந்தம் பாராட்டி
விட்டதென்ன மனிதம் தானே?

உன் இனத்தில் சேர்ந்தவன் தானடா நானும்
உன் மனத்தில் சேர மதம் வேண்டாம் எனக்கு
அன்பு பாராட்ட மணம் கொண்டேன்
பிரிவினை பாராமல் அரவணைப்பாயா
உன் அன்பும் கிட்டுமோடா எனக்கு?

நான் வேற்றான் என்று எண்ணி
சாடுவதும் செய்வாயோ?

என் நண்பா நீ ஏசினாலும் சாடினாலும்
பரிகாசம் தான் என கொள்ளும் எளியான் நான்
Etti udhaithalum உன் சன்னதி சேர்வேன்

நட்புதானடா உன் சிறப்பு
அதை என்றும் நாடும்  பாரடா என்னையும்

என்றும் உன் நட்பு நாடும், நண்பன்.

No comments:

Post a Comment