Saturday, October 1, 2016

போதையின் போதனை

மூன்று குப்பிகள் கவிழ்ந்தது
இவன் கால்களும் தான் அலைந்தது
வீடு வந்து சேர்ந்ததும்
அவள் கண்களும் நிறைந்தது
இன்றுடன் கடைசி
இவன் சொற்கள் மற்றொரு முறை பொய்தது

மூன்று குப்பிகள் கவிழ்ந்தது
இவன் கால்களும் தான் அலைந்தது
முகப்பில் களிப்புற்றிருந்த மகனின் முகம்
இவனை கண்டு தானோ வெட்கியது
இன்றுடன் கடைசி
இவன் சொற்கள் மற்றொரு முறை பொய்தது

மூன்று குப்பிகள் கவிழ்ந்தது
இவன் கால்களும் தான் அலைந்தது
மகிழ்ந்திருந்த இவன் தன் நெஞ்சம்
அமைதியுடன் அமைந்தது
இன்றுடன் கடைசி
குப்பியின் வார்தைகளோ பலித்தது