Friday, September 30, 2016

மதம் மாறிய நண்பன்

க்ஷணப்பொழுதில் மனம் மாறி
புதிதோறு மதம் கண்டு
கர்வத்துடன் இனம் பெயர்ந்தாயோ?
தனதென சொந்தம் பாராட்டி
விட்டதென்ன மனிதம் தானே?

உன் இனத்தில் சேர்ந்தவன் தானடா நானும்
உன் மனத்தில் சேர மதம் வேண்டாம் எனக்கு
அன்பு பாராட்ட மணம் கொண்டேன்
பிரிவினை பாராமல் அரவணைப்பாயா
உன் அன்பும் கிட்டுமோடா எனக்கு?

நான் வேற்றான் என்று எண்ணி
சாடுவதும் செய்வாயோ?

என் நண்பா நீ ஏசினாலும் சாடினாலும்
பரிகாசம் தான் என கொள்ளும் எளியான் நான்
Etti udhaithalum உன் சன்னதி சேர்வேன்

நட்புதானடா உன் சிறப்பு
அதை என்றும் நாடும்  பாரடா என்னையும்

என்றும் உன் நட்பு நாடும், நண்பன்.

Thursday, September 29, 2016

புதுயுக பிள்ளைகள்

வாய்ப்பேசி வார்த்தை வரும்முன்
கைப்பேசியில் அண்டம் பார்த்தவன்

இது வேண்டாம்டா என்றேன்
பயல் க்ரோதமும் கற்றுள்ளான்

பாண்டி விளையாட அழைத்தேன்
Candy crush போதுமாம்

வள்ளுவனையும் பாரதியையும் வைதேன்
நன்னெறி இதுவன்றோ என்று

வள்ளுவன் தொடர்பில் வந்தான்
Whatsappன் மூலம்

Thursday, September 15, 2016

ஒரு நாள் பிரிவு (My wife asked me if I will miss her when she is away for an official trip. Here is the answer)

அந்த ஓவியன் கையிலிருந்து தூரிகையை எடுத்தேன்
விரலிழந்த வலியில் துடித்தான்

எழுத்தாளன் கையிலிருந்து பேனாவை பிரித்தேன்
சித்தம் கலங்கியனாய் திரிந்தான்

என்னை விட்டு ஒரு நாள் நீ தள்ளி சென்றால்
பிணமென உணர்வேன் என் உயிரே